ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் உக்ரைன் குடிமகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மன் உக்ரைன் குடிமகளான IIona W. என்னும் பெண், ரஷ்யாவுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட அரசியல் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்கள், ட்ரோன் சோதனைகள் மற்றும் உக்ரைனுக்கு வழங்கப்படும் ட்ரோன்கள் தொடர்பான தகவல்களை அவர் திரட்டியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த தகவல்களை அவர் ரஷ்ய தூதரக அலுவலர் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பெர்லினில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் போலியான அடையாளத்தின் கீழ் பங்கேற்க ரஷ்ய நாட்டவர் ஒருவருக்கு உதவியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அந்தப் பெண்ணுக்கு உதவிய மேலும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் முன்னாள் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

