அரசியல் நாகரீகம் இல்லாமல் மேக்ரானை கேலி செய்துவரும் ட்ரம்ப்

20 0

அடிப்படை அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் மேக்ரானை தொடர்ந்து கேலி செய்துவருகிறார் ட்ரம்ப்.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய செய்தி ஒன்றை ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.

 

 

அத்துடன், அமெரிக்க வரிவிதிப்புகள் காரணமாக மருந்துகள் விலை உயர்ந்துள்ள விடயம் தொடர்பில், ட்ரம்பிடம் மேக்ரான் தொலைபேசி வாயிலாக பேசியபோது, அதையும் வெளியே சொல்லி, தன்னிடம் மேக்ரான் கெஞ்சியதாக, அவர் பேசுவது போலவே பேசி கேலி செய்தார் ட்ரம்ப்.

 

 

மேலும், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தன் கண்களில் சிறு பிரச்சினை ஏற்பட்டிருந்ததால் கூலிங் கிளாஸ் அணிந்தவண்ணம் கூட்டத்தில் உரையாற்ற, அதையும் கேலி பேசினார் ட்ரம்ப்.

 

அரசியல் நாகரீகம் இல்லாமல் மேக்ரானை கேலி செய்துவரும் ட்ரம்ப் | Macron S Turbulent Relationship With Trump

இவ்வளவு நடந்தும், ஜூலை மாதம் 14ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற இருக்கும் Bastille Day நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ட்ரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் மேக்ரான்.

 

அரசியல் நாகரீகம் இல்லாமல் மேக்ரானை கேலி செய்துவரும் ட்ரம்ப் | Macron S Turbulent Relationship With Trump

ஆக, ட்ரம்ப் தொடர்ந்து கேலி செய்துவந்தும், பிரான்ஸ் இன்னமும் தனது கூட்டாளர் நாடுகளுடன் நல்ல உறவுகளை கடைப்பிடிக்கவே விரும்புகிறது, மேக்ரான், ட்ரம்பை சர்வதேச விடயங்களில் ஒத்துழைக்க வைக்க, இன்னமும் தூதரக அடிப்படையிலான விருந்தோம்பல் முறையையே நம்பி செயல்படுகிறார் என பாராட்டுகின்றன ஊடகங்கள்.