‘சனாதன ஒழிப்பு பேச்சு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் விளக்கம் மிகவும் அபத்தமானது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
‘சனாதன ஒழிப்பு’ பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா, ‘80 சதவிகிதமான மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

