“வைத்திலிங்கத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய்க் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை” என சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கட்சியின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய்க் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

