காலி மாவட்டச் செயலாளர் – அரசாங்க அதிபர் பதவிக்கு கே.யூ.சந்திரலாலை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போது காலி மாவட்டச் செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றுகின்ற டபிள்யூ.ஏ.தர்மசிறி 2026.01.25 ஆம் திகதியுடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பதவிக்கு தென்மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கலாசார மற்றும் கலைகள் விவகார, சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள், மகளிர் விவகார மற்றும் பொருளாதார மேம்பாடு, வீடமைப்பு மற்றும் கட்டுமானம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான கே.யூ.சந்திரலால் என்பவரை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கே.யூ.சந்திரலாலை குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

