குறுகிய அரசியல் நோக்கங்களை விடுத்து பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்!

17 0

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இவ்வாறான சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. எனவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வடக்கிற்கு சென்று மதங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

குருணாகலில் சனிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் சரியான நிலைப்பாடு என்ன என்பது அரசாங்கத்துக்கும் தெரியவில்லை. ஒருபுறம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி சீர்திருத்தங்கள் அவ்வாறே முன்னெடுத்துச் செல்லப்படும் என்று கூறுகின்றார். மறுபுறம் அதற்கு எதிராக ஆளுந்தரப்பினரே கருத்துக்களையும் முன்வைக்கின்றனர். தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அன்றி, எதிர்கால முன்னேற்றத்துக்காகவே கல்வி சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பேச்சாளர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருமித்து வெளிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தக் கொள்கை என்ன என்பதை தெளிவாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி இவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் அவர் வேறொரு பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்.

வடக்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி தனது அரசியல் நோக்கத்துக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு மதங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறான விடயங்களை கைவிட்டு, பொருளாதாரம் நாட்டின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாளுக்கு நாள் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது. இவ்வாறான சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.தரம் 6 ஆங்கில பாட நூலில் உள்ளடக்கப்பட்ட இணையதள முகவரி மாத்திரம் இங்கு பிரச்சினையல்ல. அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்ற முழு கல்வி சீர் திருத்தமுமே பிரச்சினைக்குரியவைதான். பல்கலைக்கழக பேராசியர்கள் கூட இது தொடர்பில் பரந்துபட்டளவில் ஆராய்ந்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். எனவே அவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சீர்திருத்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

தெரிவித்தார்.