கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

14 0

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாற்றுப் பாதையில் சிறிமங்கலவத்த வீதிக்கு அருகில் கார் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து கெஸ்பாவ நோக்கிச் சென்ற கார், பாதசாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த நபர் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.