அலவ்வ துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

35 0

அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர்.

மெடியகனே பகுதியைச் சேர்ந்த கே.எம். கவிந்து நிமேஷ சத்சார என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த  இளைஞன் மோட்டார் சைக்கிளில்  பயணித்து கொண்டிருந்த போது துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது