யேர்மனி போர்கன் நகரம் வாழ் தாயக உறவுகள் ஆதரவில் தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்.

62 0

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு யேர்மனி போர்கன் நகரவாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு யேர்மனி போர்கன் நகரம் வாழ் தாயக உறவுகளின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி, கோதுமைமா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. பயன்பெற்ற மக்கள் போர்கன் நகரம் வாழ் தாயக உறவுகளிற்கு தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.