அனுராதபுரம் – தம்புத்தேகம நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பொது பேரணியின் பிரச்சார நடவடிக்கைகளை பொலிஸார் தடுத்ததாக அந்த கட்சியின் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு பேரணி தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக அதனை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
அத்துடன், அலங்காரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் பொலிஸார் தலையிட்டு அவற்றை அகற்றும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாக பொலிஸார் இவ்வாறு இடையூறு விளைவிப்பதாக ஏற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

