துபாயிலிருந்து நாட்டிற்குள் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ‘துபாய் இஷார’ என்ற முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை (17) காலை கம்பளை பொலிஸாரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஹெரோயின் போதைப்பொருளை கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொலுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல போன்ற பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விநியோகித்து வந்துள்ளனர்.
கம்பளை – தொலுவ மற்றும் மஹர ஆகிய பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கம்பளை – அங்கமன மற்றும் துந்தெனிய பகுதிகளை சேர்ந்த குறித்த சந்தேகநபர்களுக்கு கொழும்பில் இந்த போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

