மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டம் 94 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
இந்த நிலையில், பல சவால்களுக்கு மத்தியிலும் தங்களுக்கு எதோ ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வருகின்ற போதும் இறுதியில் ஏமாற்றத்துடன் செல்கின்ற நிலைமையே உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தங்களது தொழிலுரிமையினை உறுதிப்படுத்துமாறு இரவு பகலாக வீதியில் படுத்துறங்கி தொடர்ச்சியான போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் தங்களது தலைவர் உட்பட நால்வரை விளக்கமறியலில் வைத்தமையானது மிகுந்த கவலையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

