சுவரில் துளையிட்டு 30 மில்லியன் யூரோ கொள்ளை – ஜேர்மனியில் வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள்

29 0

ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றில், 30 மில்லியன் யூரோ மதிப்பிலான கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள கெல்சென்கிர்சென் (Gelsenkirchen) நகரத்தில், ஸ்பார்காஸே (Sparkasse) வங்கிக்கிளை ஒன்று இயங்கி வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வங்கி மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளை கும்பல் ஒன்று, சுவரில் துளையிட்டு பாரிய வங்கி கொள்ளையை நிகழ்த்தியுள்ளது.

கொள்ளை கும்பல் ஒன்று, திருடப்பட்ட கார் மூலம் வந்து, வாகன நிறுத்தத்தில் இருந்து வங்கியின் நிலத்தடிப் பாதுகாப்பு அறைக்குள் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

சுவரில் துளையிட்டு 30 மில்லியன் யூரோ கொள்ளை - ஜேர்மனியில் வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள் | 30 Million Euro Steals In Germany Bank Heist

அங்கிருந்த 3,000 க்கும் அதிகமான பாதுகாப்பு பெட்டிகளை, உடைத்து அதில் உள்ள பணம், தங்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டு, மீண்டும் அதே துளை வழியாக தப்பி சென்றுள்ளனர்.