இரண்டு Saab GlobalEye விமானங்களை வாங்க பிரான்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரான்ஸ் அரசு, ஸ்வீடன் நிறுவனமான Saab-உடன் 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம், பிரான்ஸ் இரண்டு GlobalEye Early Warning and Control (AEW&C) விமானங்களை வாங்கவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் விமானங்கள், தரை உபகரணங்கள், பயிற்சி மற்றும் ஆதரவு ஆகியவை அடங்கும்.
மேலும், இரண்டு கூடுதல் விமானங்களை வாங்கும் விருப்பம் பிரான்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு விமானங்கள் 2029 முதல் 2032 வரை வழங்கப்படும்.
Saab நிறுவனத் தலைவர் மிகேல் ஜோஹான்சன், “GlobalEye விமானத்தை தெரிவு செய்வதன் மூலம் பிரான்ஸ், மிக நவீனமான AEW&C தீர்வில் முதலீடு செய்கிறது. இது பிரான்ஸின் பாதுகாப்பு சுயாட்சியையும், ஐரோப்பாவின் பாதுகாப்பையும் வலுப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
ஸ்வீடன் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜோன்சன், “பிரான்ஸ் GlobalEye குடும்பத்தில் இணைவது, இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

