இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 21பேருக்கு நோர்வே தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் இயற்கைப் பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை,பிஸ்கற், பால்மா, சவர்க்காரம், சலவைத்தூள் மற்றும் பனடோல் என்பன உள்ளடங்குகின்றன.இப்பேருதவியை வழங்கிய நோர்வே தமிழ்ப் பெண்கள் அமைப்பினருக்கு பயனாளிகள், தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.













