ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல தடவைகள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை சிறைச்சாலைக்குள் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (29) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் கேட்டுக்கொ்டார். .
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.அகையால் அந்த சிறைச்சாலையில் அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்

