இங்கிலாந்து, பங்களாதேஸ் அணிகளுக்கு வெற்றி

232 0

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 45 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்ற தோல்வியை தழுவியது.

இதேவேளை, நியூநியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைப்பெற்று வரும் முக்கோண சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டியின் 6வது போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்தபோட்டியில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய பங்களாதேஸ் அணி 48.2 ஓவர்களில் நிறைவில் விக்கட்டுக்களை இழந்து 5 விக்கட்டுக்களை இழந்து 271 ஓடங்களை பெற்று வெற்றி பெற்றது.