ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது.
இதனால் உக்ரைன் ராணுவத்துக்கு வர்த்தக ரீதியில் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கும் செயற்கைகோள்களை தாக்குவோம் என ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். கீழடுக்கு சுற்று வட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மீது தாக்குல் நடத்த எஸ்-500 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் கூறியது. விண்ணில் செயல் இழந்த செயற்கைக்கோள் மீது ஏவுகணையை வீசி தகர்க்கும் சோதனையை கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யா செய்தது.

