அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை

6 0

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  கோட்டை நீதவான்  செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் செப்டம்ப மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா எம்.பி  பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது