லொஹானின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

17 0

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவில் குடிபோதையில் நுழைந்த தமிழ் கைதி ஒருவரை சுட்டுக் கொல்ல முடியும் என்று கூறி, அவரை கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் மரணச் சான்றிதழை ஜனவரி 22ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன கொழும்பு குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சரின் பிணையில் கையெழுத்திட்ட பிணைதாரர்கள் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் அனுராதபுரம் தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்