சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் 99% மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர் நோயல் பிரியந்தா இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 26,000 நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடைபட்ட அனைத்து மின்மாற்றி அமைப்புகளும் தற்போது மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 4.1 மில்லியன் மின்சார நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் இருளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

