தமிழகம் “தவெக தலைவர் விஜய்க்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” – அமைச்சர் சிவசங்கர்

15 0

“திமுக குறித்து புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதற்கு வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் லாரி இயக்கி வைத்தல், உடையார்பாளையம், உஞ்சினி, செந்துறை, நக்கம்பாடி, குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் ஆகிய கிராமங்களில் சாலைகள் மேம்படுத்துதல், பாலம் கட்டுதல் என ரூ.25.63 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று அந்தந்த பகுதிகளில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது: “நெடுஞ்சாலைத் துறை மூலம் செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தளவாய் பகுதியில் கடந்த வெள்ளத்தின்போது வெள்ள நீர் வடியாமல் இரண்டு கிராமங்கள் மூழ்குகின்ற நிலையில் இருந்த இடத்தில், சாலையை வெட்டி, அந்த நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த இடத்தில் இன்றைக்கு புதிய ஒரு பாலம் அமைக்கப்படுகிறது.