ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் – மியன்மார் இராணுவம் மறுப்பு

272 0

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, மியன்மார் இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.

மியன்மாரில் படையினரும் பௌத்த அடிப்படைவாதிகளும் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 65 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஸுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் பலர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் அந்த நாட்டின் இராணுவத்தினர் சுயமாக விசாரணையை நடத்தி, அவ்வாறான குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று அறிவித்துள்ளனர்.

இதன்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட 18 குற்றச்சாட்டுகளில் 12 குற்றச்சாட்டுகள் பிழையானவையும் என்றும், ஆறு குற்றச்சாட்டுகள் போலியாக சோடிக்கப்பட்டவை என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.