மஹிந்தவுக்கு எதிரான வழக்கு 26ஆம் திகதி விசாரணைக்கு

272 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை அரசியல் பணிகளுக்காக பயன்படுத்திவிட்டு 140 மில்லியன் ரூபா பணம் செலுத்தாமை தொடர்பான வழக்கு கொழும்பு வணிக நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களான அநுர பிரிதர்ஷன யாபா மற்றும் சுஸில் பிரேமஜயந்த ஆகியோரின் பெயர்களை நீக்கி தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவுக்கு, பிரதிவாதிகளால் எதிர்ப்பு வெளியிடபபட்டுள்ளது.

இதையடுத்து, இது தொடர்பாக கருத்து தெரிவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிர்வரும் 26 ஆம் திகதிவரை இறுதி தினமாக வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.