விசாரணை கைதிகள் ஜாமீன் பெற எளிய நிபந்தனைகள்!

247 0

விசாரணை கைதிகள் ஜாமீன் பெறுவதற்கு எளிய நிபந்தனைகளை மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.

விசாரணை கைதிகள் ஜாமீன் பெறுவதற்கு எளிய நிபந்தனைகளை மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.

நாடு முழுவதும் சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகள் மட்டுமின்றி விசாரணை கைதிகளும் பெருமளவில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 3-ல் 2 பங்கினர் விசாரணை கைதிகளே ஆவர். இவர்கள் ஜாமீன் பெறுவதற்கு தற்போதுள்ள இந்திய குற்றவியல் சட்டம் 636 ஏ-யின் படி பல்வேறு கடுமையான நிபந்தனைகளை கடந்து செல்லவேண்டி இருக்கிறது.

இதையடுத்து கடந்த ஆண்டு மத்திய அரசு, ஜாமீன் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாமா? என்பது குறித்து பரிந்துரை செய்யும்படி சட்ட கமிஷனிடம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, விசாரணை கைதிகள் ஜாமீன் பெறுவதற்கு தற்போதுள்ள நடைமுறைகளை முற்றிலுமாக மாற்றியமைத்து எளிய நிபந்தனைகளை விதிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது.

இதுகுறித்து சட்ட கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியாதாவது:-

7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களில் விசாரணை கைதிகள் இதில் மூன்றில் ஒரு பங்கு காலம் அல்லது இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்து இருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாம்.

இதேபோல் ஜாமீன் பெறும் விசாரணை கைதிகள் ஜாமீன் தொகையை செலுத்த முடியாத பட்சத்தில், தேவைப்படும் நேரத்தில் உரிய அதிகாரிகள் முன்பாக ஆஜர் ஆவேன் என்ற உறுதிமொழியுடன் ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு போன்ற அரசின் அங்கீகார அடையாள அட்டைகளை டெபாசிட் செய்து ஜாமீன் பெறலாம்.

தொலை தூர பகுதிகளில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு இந்த புதிய நடைமுறைகள் மிகவும் உதவியாக அமையும். இந்த மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் நோக்கத்தை அடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

அடையாள அட்டைகளை டெபாசிட் செய்த பின்பு வழக்கு விசாரணைக்கு கைதிகள் வராமல் போய்விட்டால் என்ன செய்வீர்கள்? என்று அந்த அதிகாரியிடம் கேட்டபோது, அதற்கு அவர், “அதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.