33 மணி நேரம் படுத்திருந்து $550 வென்ற இளைஞன்

17 0

சீனாவில் ஒரு வினோதமான போட்டி நடைபெற்றுள்ளது.

மெத்தையில் அதிக நேரம் படுத்திருப்பதே இலக்கு.23 வயது ஆடவர் மொத்தம் 33 மணி நேரம் 35 நிமிடங்கள் படுத்திருந்து போட்டியில் வெற்றி பெற்றார்.

அவர் 3,000 யுவான் (சுமார் 550 வெள்ளி) பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றார்.

கடந்த வாரம் ஒரு கடைத்தொகுதியில் போட்டி நடைபெற்றது.

மெத்தை நிறுவனத்தின் ஆதரவில் போட்டி இடம்பெற்றதாகச் சீன ஊடகங்கள் கூறின.

போட்டியின்போது மெத்தையில் அமரக் கூடாது; மெத்தையிலிருந்து எழுந்து செல்லக் கூடாது.