“செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பாகப் பயன்படுத்தவேண்டும்”

22 0

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செயற்கை நுண்ணறிவு பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜொஹான்ஸ்பர்க்கில் (Johannesburg) G20 உச்சநிலைக் கூட்டத்தில் அவர் பேசினார்.அரசாங்கத்தின் திறனை மெருகேற்றவும், உற்பத்தித் திறனைப் பெருக்கவும் செயற்கை நுண்ணறிவின் உதவியை உறுதி செய்ய வேண்டும் என்றார் பிரதமர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு ஊழியர்கள் ஈடுகொடுக்க அரசாங்கங்கள் உதவ முடியும் என்றார் அவர்.

உலக வளர்ச்சிக்கும் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் G20 நாடுகள் முக்கியப் பங்காற்ற முடியும் என்று திரு. வோங் கூறினார்.