யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

16 0

யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 18 ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணைக்கு சென்றவேளை அங்கு நின்ற இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடாத்திய இருவரும் தலைமறைவாகி உள்ளதாகியுள்ளதோடு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.