மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை 27ம் திகதி நினை வேந்தலை முன்னிட்டு மட்டு மாநகர சபையினர் வியாழக்கிழமை (20) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 5 வது அமர்வு வியாழக்கிழமை (20) சபா மண்டபத்தில் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து மாநகரசபையில் செய்யப்பட்ட புனரமைப்பு மற்றும் வாகனம் திருத்தம், நிரந்தர ஊழியர் சம்பளம் போன்ற செலவு செய்த நிதிகள் தொடர்பாக சபை அனுமதிக்கு முன்வைக்கப்பட்டு சபை அனுமதி பெறப்பட்டது.
இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முத்துலிங்கம் துதீஸ்வரன், சபை அமர்வு ஆரம்பித்து 6 மாத காலம் முடிவடைந்ததுடன் பல தீர்மானங்கள் முன்வைத்துள்ள போதும் அது இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
கல்லடி பாலத்தில் கலர் மின்குமிழ் பொருத்தப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன் கல்லடி பாலத்தில் இருந்து திருகோணமலை வீதி சந்திவரை மின்குமிழ்கள் ஒளியவில்லை.
இதனால் இரவில் கட்டாகாலி மாடுகள் நாய்கள் நடமாடுவதால் அதிக வீதி விபத்து ஏற்படுகிறது இவ்வாறு எவ்வளவோ பிரச்சனைகள் கருவறை தொடங்கி கல்லறை வரை இருக்கிறது ஆனால் செயற்பாட்டை பார்த்தால் கேள்வி குறியாக இருக்கிறது.
இவ்வாறு வீதி வியாபாரம், தொடர்ந்து இடம்பெறுகின்றது. அதற்கான நடவடிக்கை இல்லை. இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புகள் தொடர்ந்து இடம்பெறுகின்றது சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. என பல பிரச்சனைகள் இது எதுவுமே செயற்பாட்டில் இல்லை என்றார்.
அதற்கு பதிலளித்த பிரதி மேஜர், தற்போது சிறுவர் பூங்காவிற்கான விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்து திருத்தி வருவதாகவும் கட்டாக்காலி மாடுகளை வெளியில் இருந்து ஆட்களை நியமித்து அதனை பிடித்து வருவதாகவும் வீதி ஓர வியாபாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக முன்னெடுத்து வருவதாக சுட்டிக் காட்டினார்.
இதனை தொடர்ந்து தமிழரசு கட்சி உறுப்பினர் ரகுநாதன் திருகோணமலையில் இடம்பெற்ற புத்தர் சிலை விவகாரம் ஞானசார தேரர் சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தை வன்மையாக கண்டித்து உரையாற்றிய அவர் இது இராவணன் ஆண்ட சிவபூமி என சொல்லப்படுகிற இலங்கைத் தீவிலே புத்தரை கொண்டு வந்து வைத்துள்ளனர்.
புத்தர் கூட இந்தியாவில் இந்துவான சித்தாத்தன் என்றவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என்றதை மறந்துவிட்டு புத்தர் என சொல்லுகின்றார். இந்த அரசாங்கம் ஒரு தேசிய நல்ல அரசாங்கம் என்று சொல்லுகின்ற நிலையில் இவ்வாறான ஒரு செயல்பாட்டை செய்து மீண்டும் ஒரு இன வன்முறையை தூண்டும் செயல்பாட்டை செய்து வருகின்றனர்.
கடந்த 2002ம் ஆண்டு புத்தர் சிலை ஒன்று வைத்து அங்கு கலவரம் ஒன்று இடம்பெற்றது அவ்வாறான நிலையில் மீண்டும் மீண்டும் தமிழர்களுடைய வரலாற்றை இல்லாமல் செய்வதற்கு புத்தர் சிலையை வைத்து சிவபூமி புத்தர் பூமி என திரிவுபடுத்த செய்கின்றனர் இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு இதற்கு எதிராக அனைத்து சபைகளும் தீர்மானம் எடுத்து ஜனாதிபதிக்கு முன்வைக்கவும் என்றார்.

