இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை, காரணமாக ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பலதாழ் நிலங்கள் நீரினால் நிரம்பி காணப்படுகின்றன.
இறக்குவானை நகரிலுள்ள பிரதான பஸ்தரிப்பு நிலையம் நேற்று வியாழக்கிழமை (20) மாலை 5.00 மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள் என்பன வெள்ள நீரினால் நிரம்பி காணப்படுகின்றன.
20 க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இடரனத்தம் காரணமாக பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க கொடக்கவெலையிலிருந்து இறக்குவானை செல்லும் வீதியில் குறிப்பிட்ட பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதோடு, மக்கள் இவ்வீதியை தவிர்த்து மாற்று வீதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மாலை வேளையில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் காலைவேளையில் கடுமையான பனிப்பொழிவும் காணப்படுகின்றன. மிகவும் தாழ் நிலப்பகுதியான இரத்தினபுரி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளில் வழமைக்கு மாறாக மிககூடுதலான பனி பொழி காணப்படுகின்றன.
இதனால் கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




