10வது இன்டியன் பிரிமியர் லீக் – மும்பை இன்டியன்ஸ் அணிக்கு கிண்ணம்

328 0

10வது இன்டியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

ஹதரபாத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை இன்டியன்ஸ் அணியின் குருநல் பாண்டியா (Krunal Pandya) தெரிவு செய்யப்பட்டார்.