சான்டியாகோ கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 4 பேர் பலி

56 0

வாழ்வாதாரத்தைத் தேடி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படகு கடலில் கவிழ்ந்த தகவலறிந்து, மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மேலும் ஐந்து பேரை மீட்டு, மற்றுமொரு படகில் கரைக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடச் செல்வதற்கு முன்னரே நான்கு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக மீட்புப் பணியினர் குறிப்பிடுகின்றனர்.

லிபிய ரெட் க்ரெசென்ட் அமைப்பின் தகவலின்படி, இரண்டு அகதிகள் படகுகள் பயணம் மேற்கொண்டதில் முதல் படகில் பங்களாதேஷைச் சேர்ந்த 26 பேர் இருந்தனர். இந்த படகு கவிழ்ந்ததில் பங்களாதேஷைச் சேர்ந்த 4  அகதிகளே உயிரிழந்தனர்.

இரண்டாவது படகில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 69 பேர் இருந்தனர். அந்தப் படகின் நிலை தெரியவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 90 அகதிகள் தங்களது வாழ்வாதாரம், பொருளாதாரத்தைத் தேடி, ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக லிபியாவிலிருந்து 2 படகுகளில் மத்திய தரைக்கடல் வழியாக சனிக்கிழமை (15) பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அந்த ஆபத்தான பயணத்தின்போது அகதிகள் பயணித்த இரண்டு படகுகளில் ஒன்று, லிபியாவின் அல் கான்ஸ் நகர் அருகில் சென்றபோதே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ கடற்பரப்பில் திடீரென  கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தின்போது படகிலிருந்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். பின்னர், அவர்கள் மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டபோதிலும், நால்வர் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.