நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று

379 0

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை 8.30 அளவில் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இருதரப்பினருக்கும் இடையே அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பிரதமர் தலைமையிலும் தனித்தனியே இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்றைய தினம் அமைச்சரவயில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, நிதி அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மங்கள் சமரவீiவுக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சுப் பதவி ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அமைச்சு பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பணவுக்கு அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கயந்த கருணாதிலக்கவுக்கு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சு வழங்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.