இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீநகரின் தெற்கே உள்ள நவ்காம் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (14) இரவு இந்த இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் வெடிப்பு நடந்த நேரத்தில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த பொலிஸார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் ஆவார். இந்த வெடிப்பு சம்பவத்தில் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் மேலும் ஐந்து பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

