தென் கொரியாவின் பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல்!

29 0

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள (E-Land Fashion) என்ற பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தீ பரவல் இன்று சனிக்கிழமை (15) காலை 6:10 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீ பரவல் அதிகரித்து வருவதால்  (Response Level 2) என்ற இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அனைத்து தீயணைப்பு பிரிவினரும் அணிதிரட்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தென் சங் சியோங் தீயணைப்பு படையின் சுமார் 63 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 129 தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.