சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயிலில் (Yongqing temple) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இக்கோயிலுக்குள் அமைந்துள்ள மூன்று மாடி மண்டபத்தில் புதன்கிழமை (12) காலை 11.24 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆலயத்தில் நபரொருவர் மெழுகுவர்த்தி தூபத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாலேயே அங்கு தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கோயில் மண்டபத்தில் பரவிய தீ, மண்டபத்தின் மரக் கூரைகள் வரை பற்றியெரிந்ததால் பாரிய கறுப்பு நிற புகை கிளப்பியது. இந்நிலையில், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பு தேடி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.


