சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி குறித்து விசாரணை

35 0

கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் சொகுசாக இருப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவும் காணொளி குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம்  தெரிவித்துள்ளது.

கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவது போன்றும்  மற்றுமொரு கைதி அவருக்கு மசாஜ் செய்து பணிவிடை செய்வது போன்றும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

காணொளியில் உள்ள கைதி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.