தென் மத்திய ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள், மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் 20 காவற்துறையினர் கொல்லப்பட்டனர்.
இதுதவிர மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், தலிபான் தரப்பிலும் பல கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், சம்பவ இடத்தை நோக்கி விரைந்த மேலதிக படையினரும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிர்வாகம் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 16 வருடங்களாக தாலிபான்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நேற்று இடம்பெற்ற பிரிதொரு தாக்குதலுக்கு தாலிபான்கள் போராளிகளே உரிமை கோரியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

