காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 3 கிலோ கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

