விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

30 0

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியின் குறுக்கே சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன், களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை தெற்கு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.