காலி – ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

22 0

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாகொட்டுவெல்ல பகுதி கடற்கரையில், நேற்று(07) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 3 அங்குல உயரம், பச்சைநிற சாரம் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.