சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் மற்றும் ஒரு லொறியுடன் சந்தேகநபர் ஒருவர், துங்கல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
துங்கல்பிட்டிய – கபுங்கொட பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 1,943 கிலோகிராம் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு – பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துங்கல்பிட்டிய பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





