நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல கடலில் நீராட சென்ற ஒருவர், நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் உயிர்க்காக்கும் பிரிவினர் குறித்த நபரை மீட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (7) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடற்கரையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஏத்துகல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சில்வா, கான்ஸ்டபிள் ஷரோன் மற்றும் சமித ஆகியோர் குறித்த நபரை மீட்டு அடிப்படை முதலுதவி வழங்கியுள்ளனர்.
மீட்கப்பட்ட நபர் கம்பளையைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

