கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

23 0

கெப்பட்டிபொல – பெலும்கல சந்திப் பகுதியில் உள்ள, வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (07) மின்சாரம் தாக்கியதை தொடர்ந்து வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கெப்பட்டிபொல, பெலும்கல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கெப்பெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.