கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) கெக்கிராவயிலிருந்து மரதன்கடவல நோக்கிச் சென்ற ட்ரக்டர் ரக வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியது.
இவ்விபத்தில் காயமடைந்த பாதசாரி கெக்கிராவ வைத்தியசாலையிலும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹீனுக்கிரியாவ, கனேவல்பொல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

