தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

43 0

உலக சந்தையில் விலைகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, சில வாரங்களுக்குப் பின்னர் முதல் முறையாக, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 300,000 ரூபாவுக்கும் கீழே குறைவடைந்துள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின்படி, இன்று செவ்வாய்க்கிழமை (28) 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 296,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த  17 ஆம் திகதி 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 379,200 ரூபாவாக காணப்பட்டதோடு, அதனுடன் ஒப்பிடும்போது 83,200 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 410,000 ரூபாவிலிருந்து இன்றையதினம் 320,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.