சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

