பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியதுஇதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியதாவது:நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும்.
ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள் என பேசியிருந்தார்.சல்மான்கானின் இந்தப் பேச்சால் கோபமடைந்த பாகிஸ்தான், அவரை பயங்கரவாதிகள் பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

