யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

50 0

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில்,

இன்று

யாழ்ப்பாணம் செல்கிறேன்

என் நண்பர்

பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும்

மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் 

தொடங்கி வைக்கிறேன்

 

நல்லிலக்கியங்களும்

நவகலைகளும்

ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான்

பூத்துவர முடியும்

 

மனதின் வலியும்

மார்பின் தழும்பும்

கலையின் கச்சாப்

பொருள்களாகும்

 

ஈழத்தில்

நல்ல கலைவடிவங்கள்

மலர்வதற்கான

காலச்சூடு உண்டு

 

ஈழத் தமிழர் வெல்லட்டும்;

தொட்டது துலங்கட்டும்

 

என் நண்பரின் வளர்ச்சிக்கு

வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்;

நாளையே திரும்பிவிடுவேன்  எனப் பதிவிட்டுள்ளார்.