புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட பெண்

327 0

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த போட்டாகிராபர்கள்  சிறந்த முறையில் படம் பிடித்து அதனை நமக்கு இனிமையான நினைவுகளாக அமைய  ஆல்பம் அமைத்து தருவார்கள். இங்கே ஒரு பெண்  தனது திருமணம் புகைப்படம் நன்றாக வர மிக ஆபத்தான முறையை கடைபிடித்து உள்ளார்.

சீனா மீட்டியாக்கள் தெரிவித்த தகவலின் படி சீனாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் தனது மணப்பெண் உடையுடன் புகைப்படம் சிறப்பாக வர வேண்டும் என போட்டாகிராபரை கேட்டு கொண்டு உள்ளார்.அதற்கான் போட்டா சூட் ஒரு காட்டு பகுதியில் எடுக்கப்பட்டது.

சிறப்பான புகைப்படம் வரவேண்டி மணப்பெண்ணும் போட்டாகிராபரும்  சேர்ந்து மண்ப்பெணிண் திருமண உடையில் தீவைத்து உள்ளனர்.  புகைப்படத்திற்கு லைட்டிங் கிடைக்க இதை செய்து உள்ளனர். ஆனால் விளைவு விபரீதமாக மாறி விட்டது. தீ மள மள வென பரவி உடை முழுவதும் உள்ளது. தீ  எரிவதை பார்த்த மணப்பெண் அலறி அடித்து ஓடி உள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் சேர்ந்து தீயை அணைத்து உள்ளனர்.